ஆட்சி செய்தது போதும் – மஹிந்தவின் திடீர் அறிவிப்பு

இலங்கையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டை ஸ்ரீ சம்புத்தலோக மகா விஹாரைக்கு நேற்று வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் தனக்கு இல்லை. ஆட்சி செய்தது போதும். இனி புதியவர்கள் ஆட்சி செய்யட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)