செய்தி விளையாட்டு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில், ஜோ ரூட்(Joe Root) 111 ஓட்டங்களும் ஹரி புரூக்(Harry Brook) 136 ஓட்டங்களும் குவித்தனர்.

இந்நிலையில், 358 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 46.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 304 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பில், பத்தும் நிசங்க(Pathum Nissanka) 50 ஓட்டங்களும் பவன் ரத்நாயக்க(Pavan Rathnayake) 121 ஓட்டங்களும் பெற்றனர்.

இறுதியில், இலங்கை அணியை 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

மேலும், இந்த மூன்றாவது போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஹரி புரூக்(Harry Brook) மற்றும் தொடரின் நாயகன் விருதை ஜோ ரூட்(Joe Root) வென்றுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!