ஒருநாள் தொடர் – இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில், ஜோ ரூட்(Joe Root) 111 ஓட்டங்களும் ஹரி புரூக்(Harry Brook) 136 ஓட்டங்களும் குவித்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில், தனஞ்சய டீ சில்வா(Dhananjaya de Silva) மற்றும் வனிந்து ஹசரங்க(Wanindu Hasaranga) தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.





