இங்கிலாந்து: சர்ரேவில் உள்ள பிரதான வீதியில் திடீரென ஏற்பட்ட பள்ளம்

பிரித்தானியாவின் சர்ரேவில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அதன் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது.
சர்ரேவில் காட்ஸ்டோன் கிராமத்தில் உள்ள சாலையில் எதிர்பாராத விதமாக திடீரென மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் Oxted சாலை மற்றும் Bletchingley சாலை சந்திப்புக்கு இடையிலான முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கையாக, அருகிலுள்ள பல கட்டிடங்கள் காலி செய்யப்பட்டன குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர், மேலும் பள்ளத்தை சுற்றி 100 மீட்டர் பாதுகாப்பு சுற்றளவு அமைக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)