இயந்திரக் கோளாறு : புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்கிய விமானம்!
வொஷிங்டன் (Washington), டி.சி.யில் இருந்து டோக்கியோவிற்குச் (Tokyo) சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டல்லஸ் (Dulles) சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
போயிங் 777-200 விமானத்தில் இயந்திர சக்தி செயலிழந்ததன் காரணமாக மேற்படி விமானம் திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் சிறிய அளவில் தீவிபத்துக்குள்ளானதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
275 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு டல்லஸில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இயந்திர கோளாறு, மற்றும் ஓடுபாதையில் விமானம் தீப்பிடித்தது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





