“எரிசக்தி நெருக்கடி”: பிரித்தானிய அமைச்சரின் மாற்று யோசனை!
தற்போதைய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க பெட்ரோலியப் பொருட்களைச் சார்ந்து இருப்பதை விட தூய்மையான எரிசக்திக்கு மாறுவதே சிறந்தது என்று எரிசக்தி அமைச்சர் Michael Shanks தெரிவித்தார்.
வீடுகளின் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கும் நீண்ட காலப் பாதுகாப்பிற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களே சரியான தீர்வாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் கட்டப்படும் அனைத்து புதிய வீடுகளிலும் சூரிய ஆற்றல் தகடுகள் மற்றும் வெப்ப ஏற்றிகள் பொருத்தப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
வடக்குக் கடல் எண்ணெய் வளங்கள் தற்காலிகமாக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், நாட்டின் எதிர்காலம் மாசற்ற மின்சார அமைப்பை உருவாக்குவதிலேயே அடங்கியுள்ளது எனவும் அமைச்சர் Michael Shanks குறிப்பிட்டுள்ளார்.




