அழிவடைந்து வரும் பட்டாம்பூச்சிகள் : வருடத்திற்கு 07 பூச்சிகளே அடையாளம் காணப்படுவதாக தகவல்!
பிரித்தானியாவில் இறக்கைகள் கொண்ட பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் காட்டியுள்ளன.
வனவிலங்கு தொண்டு நிறுவனமான பட்டர்ஃபிளை கன்சர்வேஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட பிக் பட்டர்ஃபிளை கவுண்ட் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் தோட்டம், பூங்கா அல்லது கிராமப்புறங்களில் பார்க்கும் பட்டாம்பூச்சிகளைப் பதிவு செய்துள்ளனர்த.
14 ஆண்டு கால வரலாற்றில் இந்த ஆண்டு முடிவுகள் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புகளின்படி சராசரியாக 07 பட்டாம்பூச்சிகளே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு காலநிலை மாற்றமே காரணம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 31 times, 1 visits today)





