ஆஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் திறமையான புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்கான பிரச்சாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அறிக்கையின்படி, ஆர்வமுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்திற்குச் சென்று பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிகளுக்கு இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்; https://www.smartmoveaustralia.gov.au
(Visited 19 times, 1 visits today)





