ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் வெளிநாட்டு விமானிகளுக்கு தொழில்வாய்ப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு வெளிநாடுகளில் இருந்து விமானிகளை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கிட்டத்தட்ட 60 விமானிகள் சேவையில் இருந்து விலகி வெளிநாடு சென்றனர்.
இந்நிலையில் தற்போது விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக வெளிநாடுகளில் இருந்து விமானிகளை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அதன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் தெரிவித்தார்.
(Visited 14 times, 1 visits today)