தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகைக்காகல் குவிந்த முதியவர்களை ஒருமையில் திட்டிய ஊழியர் (வீடியோ)

தமிழக மாவட்டம், தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து வராத பெண்கள் தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்தவகையில், இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.அதன்படி, 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், தகுதியுள்ள மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கியது.மேலும், விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை வராத ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். அப்போது, அங்கு கூடியவர்களை சமாளிக்க முடியாமல் ஊழியர் ஒருவர் முதியவர்களை பார்த்து ஒருமையில் திட்டியுள்ளார்.தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1704736524032721179

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்