ஐரோப்பா

பாடசாலை கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவுள்ள இம்மானுவேல் மக்ரோன்

பிரான்ஸிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸில் பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பதற்கு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கோடைக்கால விடுமுறையின் பின்னர் நாடு திரும்பிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஊடகமொன்றுக்கு கருத்து வழங்கியபோதே இவ்வாறுத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் குறித்த அறிவிப்பானது ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோர்களிடையே விவாதத்தை தோற்றுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கல்வி நடவடிக்கையில் பின்தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்ட மாணவர்கள் செப்டெம்பர் மாதம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Students return to school in France under shadow of strike action

பரீட்சை நடைபெறாத நிலையில் பெரும்பாலும் ஜூன் மாதம் நிறைவு செய்வதற்கு அனுமதிக்கப்படும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸில் ஆண்டு ஒன்றுக்கான பாடசாலை விடுமுறையானது இரண்டு வாரங்கள் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் கோடைகால விடுமுறை அதிகமாக வழங்கப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாடசாலை விடுமுறை நாட்களை மீள் பரிசீலனை செய்ய விரும்பினால், அது கோடைகால விடுமுறை மாத்திரமன்றி ஆண்டு முழுவதுமான விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டுமென ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்