அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு : எதிரணி போர்க்கொடி!

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை Emergency Law மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டார்.

அவசரகாலச் சட்டத்தை இந்த அரசாங்கம் ஒடுக்குமுறைக்காக பயன்படுத்துகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். எனவே, அச்சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் இந்த குற்றச்சாட்டை பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரிய நிராகரித்தார்.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பு விதிகளின் கீழ், ஜனாதிபதியால் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அவசரகால நிலையை அறிவிக்க முடியும்.

அதனை நீடிக்க வேண்டுமெனில் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.

அதற்கமையவே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!