சீஷெல்ஸில் அவசரகாலநிலை பிரகடனம்!
சீஷெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன் இன்று (07.12) அவசர நிலையை அறிவித்துள்ளார். அங்கு இடம்பெற்ற மிகப்பெரிய வெடிப்பு காரணமாக குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்நாட்டின் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பயணிக்கும் நபர்கள் மட்டுமே சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்று ராம்கல்வான் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் மிக்க குறைந்த மக்கள் தொகை நாடுகளில் சீஷெல்ஸும் ஒன்றாகும்.
(Visited 21 times, 1 visits today)





