ஈரான் பதிலடி! அவசரநிலை பிரகடனம்!!
இஸ்ரேல்மீது பதில் தாக்குதலை ஈரான் ஆரம்பித்துள்ளது. முன்னாயத்த நடவடிக்கையாக இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு ஈரான் ஏவுகணைகளைத் தடுத்து அழித்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க படைதளங்கள்மீதும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகின்றது.
எனினும், அங்கிருந்து தமது படைகளை அமெரிக்கா ஏற்கனவே வெளியேற்றியுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, தமது நாட்டின் உச்ச தலைவரும், ஜனாதிபதியும் பாதுகாப்பாக உள்ளனர் என ஈரான் தெரிவித்துள்ளது.
மேற்படி நபர்கள் இருக்கும் இடங்களிலும் இஸ்ரேல், அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி இருந்தன.





