வட அமெரிக்கா

இளம் நடிகருடன் நிச்சயம் செய்து கொண்ட எலானின் முன்னால் மனைவி

எலான் மஸ்க் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரபரப்பு தான். என்ன செய்தாலும் பரபரப்புதான். கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டொலர்கள் செலவழித்து ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கினார். அதன்பிறகு இந்த ட்விட்டரை தனக்கே உரிய பாணியில் பல மாற்றங்களை செய்து செய்திகளில் இடம்பிடித்தார்.

இந்த விஷயம் ஒருபுறம் இருக்க, இப்போது அவரது முன்னாள் மனைவி தலுலா ரிலேவுக்கு பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எலான் மஸ்க், தலுலா ரிலே தம்பதி 2016ல் விவாகரத்து செய்து கொண்டனர்.

தலுலா ரிலே தன்னைவிட 4 வயது இளையவரான ‘கேம் ஆப் திரோன்ஸ்’ புகழ் தாமஸ் பிராடி சாங்ஸ்டரை மணக்கவுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக தலுலா ரிலே, தாமஸ் பிராடியுடன் டேட்டிங் செய்து வருகிறார். ரிலே தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தனது முன்னாள் மனைவி மற்றொரு திருமணத்திற்கு தயாராகி வருவதை அறிந்த எலான் மஸ்க், சிவப்பு இதயம் கொண்ட எமோஜியுடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மறுபுறம், தாமஸ் பிராடி சாங்ஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் அவர்களது நிச்சயதார்த்தம் குறித்து தெளிவுப்படுத்தி உள்ளார். ஆனால் அவர்களின் திருமணம் எப்போது என்று தெரியவில்லை.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்