புதிய AI வசதியை வெளியிட தயாராகும் எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய செல்வந்தர் எலான் மஸ்க் தமது xAI நிறுவனம் ‘Grok 3’ எனும் தானியக்க உரையாடல் வசதியை வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளார்.
அது குறித்து அவர் X தளத்தில் பதிவிட்டார்.
பூமியில் ஆக ஆற்றல்வாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியாக Grok 3 இருக்கும் என்று அவர் கூறினார்.
தவறுகளைச் சரிசெய்ய தரவுகளைப் பரிசீலிக்கும் ஆற்றலை Grok 3 கொண்டுள்ளது.
சந்தையில் OpenAI’s ChatGPT, DeepSeek ஆகிய செயற்கை நுண்ணறிவு வசதிகள் இருக்கும் வேளையில் xAI போட்டித்தன்மையை நாடுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு அபாயம் ஏற்படுத்தக்கூடியது என்று பலமுறை எச்சரித்திருக்கிறார் மஸ்க். எனினும் அவர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடு செய்ய முனைகிறார்.





