மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் ; எலான் மஸ்க் ட்வீட்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்ட்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க் தன்னுடைய X தள பதிவில் ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்களால் அல்லது செய்யறிவால் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும் இன்னும் மிக அதிகமாகவே உள்ளது என்று தெரிவத்துள்ளார்.
அமெரிக்க முதன்மை தேர்தரல் வேட்பாளர் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரின் பதிவை குறிப்பிட்டு எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் தளத்தில் ‘போர்ட்டோ ரிக்கோவின் நடைபெற்ற முதன்மை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்காண முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
அதிஷ்டவசமாக ஆவணங்கள் இருந்தத்தால் பிரச்சணை கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கைகள் திருத்தப்ப்டன’என்று தெரிவித்து இருந்தார்.