பாகிஸ்தான் தேர்தல் – தேர்தல் ஆணையர், தலைமை நீதிபதி மீது புகார்
கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான்நாடாளுமன்றத்தின் 266 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வெளியான முடிவுகளில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 93 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -என் 75 தொகுதிகளிலும், பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள்கட்சி 54 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
இந்த சூழலில் ராவல்பிண்டி தேர்தல் ஆணையர் லியாகத் அலி நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன.
இதற்கு தலைமை தேர்தல் ஆணையரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உறுதுணையாக உள்ளனர்.
பல்வேறு தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தனர். ஆனால், போலி வாக்குச்சீட்டுகள் மூலம் மற்ற கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
இந்த மோசடியை கண்டித்து எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.