இலங்கை தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க தேசிய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம். ரத்நாயக்க. இது தொடர்பான தகவல்களை இன்றும் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தேர்தலுக்குப் பணம் செலவு செய்வது மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஒரு தேர்தல் கூட நடத்தப்படாத காரணத்தினால், குறித்த சட்டத்தின் விதிகள் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு உரிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய ரஞ்சித்மத்தும பண்டார, சிசிர ஜயக்கொடி, உவிந்து விஜேவீர உள்ளிட்டோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
(Visited 10 times, 1 visits today)