மிக இளைய வயதில் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்!

சமீபத்தில் நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாம் கார்லின் “பாராளுமன்றத்தின் குழந்தை” என்று அழைக்கப்படுவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியில் 39 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான சாம், சுமார் 22 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றிய ஷைலேஷ் வராவை தோற்கடித்துள்ளார். .
தனது வெற்றியை “அரசியல் பூகம்பம்” என்று வர்ணித்த சாம், இன்னும் அதிகமான இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.
(Visited 46 times, 1 visits today)