இலங்கையில் வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் சுற்றிவளைப்பு
இலங்கையில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த அனைவரும் கைதாகினர்.
கைதான அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகளாவர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





