போர் நிறுத்தத்தின் எதிரொலி – தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கம்போடிய வீரர்கள் விடுதலை!
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாய்லாந்து இராணுவம் 18 கம்போடிய வீரர்களை இன்று விடுவித்துள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடிய நாடுகளுக்கு இடையே கடந்த 20 நாட்களாக இடம்பெற்ற மோதல் நிலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மோதல் நிலைமை காரணமாக குறைந்தது 101 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரு தரப்பிலும் அரை மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தாய்லாந்து இராணுவத்தின் காவலில் இருந்த கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் இருந்தபோது கைதிகள் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் கொள்கைகளின்படி” நடத்தப்பட்டதாக தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.





