கூந்தல் அடர்த்தியாக வளர இலகுவான வழிகள்!
பெண்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது தலைமுடி பிரச்சனைதான். தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான முடியை பெறுவதற்கான வழிகள் என்ன என்பதே பலரது தலையாய கவலை.
இந்த கூந்தல் தைலம் செய்து பயன் படுத்தி பாருங்களேன் . உங்க கூந்தல் கரு கரு என்று அடர்த்தியாக வளரும்.
மற்ற காரியத்தை போன்று கூந்தலை சுலபமாக நினைத்து விட முடியாது. நமக்கு அழகே கூந்தல் தான். ஒருவர் என்னதான் அழகாக இருந்தாலும் தலையில் முடி இல்லையென்றால் பார்க்க அழகாக இருக்காது.
இதனால், அசாதாரணமாக இருந்து விடாமல் தலைமுடிக்கு சரியான பராமரிப்பை பின்பற்ற வேண்டும். முடி உதிர்வை நிறுத்த நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், “எண்ணெய் மசாஜ்” வாரத்தில் ஒரு முறையாவது கண்டிப்பாக செய்ய வேண்டும்.
கூந்தல் தைலம் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
கற்றாழை
செய்முறை :
கற்றாழையை எடுத்து அதன் பக்கவாட்டிலுள்ள தோல்களை நீக்கி இரண்டாகவெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதிலுள்ள சாறு நன்றாக தலைப்பகுதியில்நன்கு இறங்குமளவிற்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு பௌலில் தேவையான அளவு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய்எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்மாத்திரையை எடுத்து அதனுள் உள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.
இந்த எண்ணெயை நேரடியாக சூடேற்றமால், ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரைஊற்றி, அதனுள் எண்ணெய் கலவையுள்ள கிண்ணத்தை வைத்து சிறிது நேரம்சூடேற்ற வேண்டும்.
பிறகு அந்த எண்ணெயை தலைப்பகுதியில் நன்கு படும்படிதடவி 10 நிமிடம் கைகளால் மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.