ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து பதிவான நிலநடுக்கங்கள் – அச்சத்தில் மக்கள்!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு சற்று முன்பு ஒரானா பகுதியில் 3.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இவ் நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், விக்டோரியா வரை உணரப்ட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஒருசில மணிநேரங்களில் இன்று (13.09) அதிகாலை மேல் ஹண்டரில் உள்ள மஸ்வெல்புரூக் அருகே 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவானது.
ஆழமான ஓரானா நிலநடுக்கத்தைப் போலன்றி, இது மேற்பரப்புக்கு மிக அருகில் இருந்தது, 3 கிலோமீட்டர் ஆழத்தில் மட்டுமே தாக்கியது எனவும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் நிலநடுக்கத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)