மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது . அந்நாட்டின் மைக்டிலா நகரை மையமாக கொண்டு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.
ஆனால், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு உள்பட பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 5 ஆயிரத்து 17 பேர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கத்தில் சிக்கி மாயமான 148 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
(Visited 2 times, 1 visits today)