திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம் -126 பேர் மரணம், 180 பேர் காயம்
திபெத்தின் ஷிகாட்சே நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 126க்கு உயர்ந்திருக்கிறது.
மேலும் 180 பேர் காயமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்தியாவின் சில பகுதிகளிலும் நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவிலும் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டதாய்க் கூறப்படுகிறது.
ஏறக்குறைய 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
(Visited 4 times, 4 visits today)