நியூசிலந்தை உலுக்கிய நிலநடுக்கம் – கடற்கரைகளை தவிர்க்குமாறு கோரிக்கை

நியூசிலந்தின் தெற்குத் தீவை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று உலுக்கியுள்ளது.
நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. பொருட்சேதமும் உயிருடற்சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
Southland, Fiordland ஆகிய பகுதிகளில் வலுவான நீரோட்டங்கள் ஏற்பட்டு ஆபத்து நேரிடலாம் என்பதால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் கடற்கரைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
(Visited 15 times, 1 visits today)