மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம் – இருவர் பலி!! 500 பின் அதிர்வுகள் ஏற்பட்டதால் பரபரப்பு!
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியை நேற்று உலுக்கிய வலுவான நிலநடுக்கம் காரணமாக இரண்டுபேர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின்போது ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமினின் (Claudia Sheinbaum) பத்திரிக்கையாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்காரணமாக ஏராளமான மக்கள் அந்த பகுதியில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேற்படி நிலநடுக்கமானது 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அகாபுல்கோவைச் (Acapulco) சுற்றியும், மாநிலத்தின் பிற நெடுஞ்சாலைகளிலும் பல்வேறு நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக மாநில சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் குரேரோவின் (Guerrero) தலைநகரான சில்பான்சிங்கோவில் (Chilpancingo) உள்ள ஒரு மருத்துவமனை சேதமடைந்ததாகவும், அங்கிருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





