வடக்கு வனுவாட்டுவில் நிலநடுக்கம் பதிவு : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
வடக்கு வனுவாட்டுவில் இன்று (22.11) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதிகாரிகள் , கடல் கண்காணிப்பு கருவிகளால் “சிறிய சுனாமி அலைகள்” உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளனர்.
நிலநடுக்கம் 22 கிலோமீட்டர் (14 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர வனுவாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் “கவனமாக இருக்க வேண்டும் என்றும், சாதாரண எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)