காஷ்மீர் மற்றும் லடாக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று காலை சுமார் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் அதிர்வுகள் ஸ்ரீநகர், லே மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், சுமார் 200 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
காஷ்மீர் மற்றும் லடாக் தவிர, டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.





