நரம்புகள் பலவீனமாக உள்ளதை உணர்த்தும் ஆரம்ப கால அறிகுறிகள்

உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்புகள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், உடல் இயக்கம் பல வகைகளில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மூளைக்கும் உடலில் மற்ற பகுதிகளுக்கும் சமநிலைகள் மற்றும் உணர்வுகளை கடத்தவும், தசைகளின் செயல்பாட்டிற்கு உதவும் நரம்புகள், பலவீனமடைய அல்லது பாதிக்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். நாள்பட்ட உடல்நல பாதிப்பு, உடலில் ஏற்படும் காயங்கள், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தாமல் இருத்தல் போன்ற பல காரணங்கள் உள்ளன.
கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை அல்லது எரிச்சல் உணர்வு
கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை, சருமத்தில் ஏற்படும் எரிச்சல் உணவு ஆகியவை நரம்புகள் சேதமடைந்ததன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். சேதமடைந்த நரம்புகள் மூளைக்கு, அசாதாரணமான வகையில் சமிக்ஞைகளை அனுப்புவதால், அல்லது தவறான சமயங்களை அனுப்புவதால் இந்த உணர்வுகள் ஏற்படக்கூடும். வெப்பநிலை மாற்றங்களை சருமம் உணரும் திறனையும் இழக்க (Health Tips) நேரிடலாம்.
சமநிலை இழப்பு மற்றும் தசை பலவீனம்
நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு தசைகளை பாதிப்பதால், உடல் பாகங்களை இயக்குவதில் சமங்களை எதிர்கொள்ளலாம். தேனீர் கப்பை குடித்துக் கொள்வது, நடப்பது போன்ற எளிய காரியங்கள் கூட மிகவும் கடினமாக இருக்கலாம். அடிக்கடி பொருட்களை கைநழுவி தவறவிடுதல், நடக்கும்போது சமநிலை இழத்தல் ஆகியவை, நரம்புகளில் சேதம் ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் ஆபத்தான அறிகுறிகள்.
உடல் குத்துவதைப் போன்ற உணர்வு அல்லது வலி
அசை அல்லது மூட்டு வலியை போல் அல்லாமல் நரம்புகளில் ஏற்படும் வலி மிகவும் தீவிரமாக இருக்கும். கை கால்களில் விவரிக்க முடியாத அளவில் கடுமையான வலி அல்லது குத்துவதைப் போன்ற வலி ஏற்படலாம். காரணம் இல்லாமல் இந்த வலிகள் நீண்ட நேரம் அல்லது காலம் எடுத்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
உடல் உறுப்புக்கள் செயல்பாட்டில் சிக்கல்கள்
நரம்பு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் சிறுநீர்ப்பை கட்டுப்பாடு, செரிமான அமைப்பு, பாலியல் ரீதியான பிரச்சினை போன்ற பல ஏற்படலாம். திருமண பந்தத்தில் உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல், கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கழித்தல், நிற்கும்போது தலை சுற்றுதல், அதிகப்படியான வியர்வை, செரிமான பிரச்சனைகள், உணவை விழுங்குவதில் சிரமம், ஆண்களுக்கு உண்டாகும் விறைப்பு தன்மை பிரச்சனை உள்ளிட்டவை, நரம்பியல் சேதத்தின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
நரம்புகள் பாதிப்பிற்கான சிகிச்சை முறைகள்
சேதமடைந்த நரம்புகளை குணப்படுத்த, ஊட்டச்சத்து மருந்துகள், காயங்களை போக்கும் மருந்துகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், நரம்பை தூண்டும் சிகிச்சைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தீவிர நிலைகளில் அறுவை சிகிச்சை தேவைப் படலாம்.