சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஓடிடியில் படைத்த சாதனை என்ன தெரியுமா?

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தென்னிந்திய படங்களிலேயே ஓடிடியில் புதிய சாதனையை படைத்துள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘லக்கி பாஸ்கர்’. மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. வங்கியில் வேலை பார்க்கும் துல்கர் சல்மான், அந்த வங்கிக்கு தெரியாமல், பணத்தை எடுத்து மற்றொரு தொழிலில் முதலீடு செய்து அதன் மூலம் லாபம் பார்க்கிறார்.
அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
கடந்த நவம்பர் 28-ம் தேதி படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி 13 வாரங்கள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஒரே தென்னிந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.