துபாயில் 10 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
துபாய் நகர விமான நிலையம் நகர மாநிலத்தின் இரண்டாவது இடத்திற்கு மாற்றுவதற்கான நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இதற்கான திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக 35 பில்லியன் செலவிடவுள்ளதாகவும் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு ஏற்பட்ட வருமான இழப்பை சீர்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமுற்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்த நீண்டகாலமாக திட்டமிடப்பட்டாலும், 2009 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கைவிடப்பட்டது.
“எதிர்கால சந்ததியினருக்காக நாங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்குகிறோம், எங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறோம்,” என்று ஷேக் முகமது ஒரு ஆன்லைன் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த புதிய விமான நிலையத்தில் ஐந்து இணையான ஓடுபாதைகள் மற்றும் 400 விமான வாயில்கள் உள்ளடங்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது