ஈரானிலிருந்து 13 ஏவுகணைகள், 27 ஆளில்லா விமானங்கள் எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
ஈரானிலிருந்து வந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 27 ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரகம் எதிர்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
தாக்குதல்கள் தொடங்கிய முதல் நாளிலிருந்து, 327 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள், மற்றும் 1,699 ட்ரோன்களையும் எதிர்கொண்டதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.





