நேபாள போராட்டத்தின் போது தப்பி ஓடிய போதைப்பொருள் கடத்தல்காரர் குஜராத்தில் கைது
உள்நாட்டு போராட்டங்களின் போது நேபாள(Nepal) சிறையில் இருந்து தப்பிச் சென்ற சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் குஜராத்தில்(Gujarat) கைது செய்யப்பட்டுள்ளார்.
ககடாபித்(Kakatapit) பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் தலை மறைவாக இருந்த நிலையில் தர்மேஷ் ராசிக்லால் சுனாரா(Dharmesh Rasiklal Sunara) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நேபாளத்தின் காத்மாண்டு(Kathmandu) விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ரூ.13 கோடி மதிப்புள்ள 13 கிலோ கலப்பின கஞ்சாவை கடத்த முயன்றபோது தர்மேஷ் சுனாரா கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது நாட்டில் நிலவிய போராட்டங்களின் போது தர்மேஷ் சுனாரா சிறையில் இருந்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில், தர்மேஷ் ராசிக்லால் சுனாரா மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் மேலதிக விசாரணையை எதிர்கொள்ள விரைவில் நேபாளத்திற்கு நாடு கடத்தப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்னனர்.





