ஐரோப்பா

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ட்ரோன் தாக்குதல் – 16 பேர் உயிரிழப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள கோஸ்டியன்டினிவ்கா நகரில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய படையினர் நடத்திய இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

போர்க்களத்திற்கு அருகாமையில் உள்ள தொழில் நகரத்தில் இந்த  தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய அதிகாரிகள் டெலிகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவினுடைய  தீமை கூடிய விரைவில் தோற்கடிக்கப்பட வேண்டும் என Zelenskiy கூறினார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் Ihor Klimenko கொல்லப்பட்ட 16 பேர் தவிர, குறைந்தது 28 பேர் தாக்குதலில் காயமடைந்ததாகவும், அது மத்திய நகர சந்தையில் நடந்ததாகவும் கூறினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!