இலங்கையில் பண்டிகைக் காலங்களில் விபத்துகள் தொடர்பில் வெளியான தகவல்

பண்டிகைக் காலங்களில் விபத்துக்கள், குறிப்பாக பட்டாசு தொடர்பான சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதை சுகாதார அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான கருத்துப்படி, குறித்த காலப்பகுதியில் பட்டாசு தொடர்பான விபத்துக்கள் காரணமாக எவரும் அனுமதிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், மூன்று நோயாளர்கள் தேசிய வைத்தியசாலையில் சிறு காயங்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மேலும், வாகன விபத்துகள், வீட்டு விபத்துகள், தவறி விழுதல் உள்ளிட்ட சில சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. இருப்பினும், சம்பவங்கள் எதுவும் முக்கியமானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)