விளையாட்டு

அதிரடி வெற்றி – இந்தியா மீண்டும் சாம்பியன்

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (8) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

 

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

 

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், இசன் கிஷன் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இதற்கமைய இந்திய அணி மூன்றாவது முறையாக இருபதுக்கு 20 தொடரில் செம்பியனாகி சாதனைப் படைத்துள்ளது.

உலக கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு அணி பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டம் இதுவாகும்.

இந்நிலையில் 256 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மிட்செல் சேட்னர் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Sainth

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!