பொதுவெளியில் தோன்றிய “டூம்ஸ்டே விமானம்” – பரபரப்பில் உலக நாடுகள்!
அணுசக்தி யுத்தத்தைத் தாங்கும் வகையில் அமெரிக்காவால் நிர்மாணிக்கப்பட்ட “டூம்ஸ்டே விமானம்” இந்த வாரம் பொதுவெளியில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரழிவு தரும் அவசரநிலைகளின் போது அமெரிக்க அரசாங்கத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட போயிங் E-4B நைட்வாட்ச் விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் (LAX) தரையிறங்கியுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சில நாட்கள் கழித்து இந்த விமானம் பொது வெளியில் தோன்றியுள்ளது.
இது அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நெருக்கடியை அடிகோடிட்டு காட்டுவதாகவும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை பிரதிபலிப்பதாகவும், நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





