செரிமான பிரச்சனைகளை சாதாரணமாக எண்ணவேண்டாம்: மாரடைப்புக்கு வழிவகுக்கும்
செரிமான பிரச்சனைகள் இந்த காலத்தில் மிகவும் பொதுவானவையாகி விட்டன. இவை பெரும்பாலும் சிறிய அசௌகரியங்களை ஏற்படுத்துவது போல் தோன்றும், ஆனால் அவை மாரடைப்பு ஆபத்து உட்பட கடுமையான உடல்நல அபாயங்களின் அறிகுறியாக இருக்கலாம் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
செரிமான அமைப்புக்கும் இதயத்திற்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, நாள்பட்ட மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இதயத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக இருதய அமைப்பில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
குடல் நுண்ணுயிர் உடலில் ஏற்படும் அழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. இந்த அழற்சி பல இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இந்த சமநிலையை சீர்குலைத்து உடல் முழுவதும் வீக்கத்தை அதிகரிக்கும். இது தவிர, மலச்சிக்கலின் போது, நாம் மலம் கழிக்க அவ்வப்போது அதிக அழுத்தம் கொடுப்பதால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த நிலை இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற தீவிர இருதய நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என ‘தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஹைப்பர் டென்ஷன்’-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் குறிப்பிடபட்டுள்ளது.
பிடிப்பு சுழற்சியின் விளைவு: மலச்சிக்கலின் போது மலம் கழிக்க அதிக அழுத்தம் அளிக்க வேண்டி வருகிறது. இதனால் ஏற்படும் பிடிப்பு மார்பு மற்றும் அடிவயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது இரத்த அழுத்தத்தில் திடீர் அதிகரிப்பு மற்றும் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
குடலில் சமநிலையற்ற தன்மை: நீடித்த மலச்சிக்கல் குடல் திசுக்களை மோசமாக்கும், இது நரம்புகளில் கொழுப்பு குவிவதற்கு வழிவகுக்கும், இது மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
வீக்கத்தின் விளைவு: நாள்பட்ட மலச்சிக்கல் உடலில் கழிவுகள் சேர்வதை அதிகரிக்கிறது. இது வீக்கத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.
இதயம் மற்றும் செரிமானத்தை எவ்வாறு பாதுகாப்பது?
– பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் மலச்சிக்கலை தடுக்கும்.
– பழங்கள் உடல் மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்கும்.
– போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், மலச்சிக்கல் அதிகமாகும்.
– உடற்பயிற்சி செரிமானத்திற்கு மட்டுமல்ல, இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
– அதிக உப்பு மற்றும் குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவு செரிமானம் மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றது.
செரிமான பிரச்சனைகளை சரியான நேரத்தில் தீர்ப்பது இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். சரிமானத்தை சீராக வைக்க, உங்கள் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துவது மிக அவசியம். இதன் மூலம் செரிமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.