வாரத்திற்கு 10000 பேரை வெளியேற்றும் டொமினிக் குடியரசு : புலம்பெயர்வோருக்கு ஏற்படும் நெருக்கடி!
சட்டவிரோதமாக வசிக்கும் ஹைட்டியர்களை வெளியேற்றும் திட்டத்தை டொமினிக் குடியரசு வெளியிட்டுள்ளது.
அரசின் திட்டத்தின்படி வாரத்திற்கு 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஹெய்டியுடன் ஹிஸ்பானியோலா தீவைப் பகிர்ந்து கொள்ளும் டொமினிகன் குடியரசில் ஹைட்டி குடியேற்றவாசிகள் “அதிகப்படியாக” இருப்பதைக் கண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹோமரோ ஃபிகுரோவா தெரிவித்துள்ளார்.
கும்பல் வன்முறைத் தாக்குதலை எதிர்த்துப் போராட ஹைட்டியில் ஐ.நா-ஆதரவுப் பணியாக ஹைட்டிய புலம்பெயர்ந்தோர் டொமினிக் குடியரசில் அதிகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
டொமினிக் குடியரசு கடந்த ஆண்டில் 174000 புலம்பெயர்ந்தோரை வெளியேற்றியதுடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 67,000 பேரை வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)