பிரமிட்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட வியத்தகு முகபாவனையுடன் கூடிய பொம்மைகள்!

2,400 ஆண்டுகள் பழமையான வியத்தகு முகப்பாவனை கொண்ட பொம்மைகளின் மர்மமான தொகுப்பு எல்சல்வடோரில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எல் சால்வடாரில் உள்ள ஒரு பிரமிட்டின் மேல் இந்த பொம்மைககள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
மூன்று பொம்மைகள் சுமார் ஒரு அடி (30 செ.மீ) உயரம் கொண்டவை, மற்ற இரண்டு சுமார் 10 செ.மீ (0.3 அடி) மற்றும் 18 செ.மீ (0.6 அடி) உயரம் கொண்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆன்டிக்விட்டி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அவை அனைத்தும் முதன்முதலில் 2022 ஆம் ஆண்டில் தளத்தின் மிக உயரமான பிரமிடு கட்டமைப்பின் மேல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த இடத்தில் மனித எச்சங்கள் எதுவும் காணப்படாததால், பொம்மைகள் பெரும்பாலும் பொது சடங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
கண் மட்டத்திலிருந்து பொம்மைகள் கோபமாகத் தோன்றினாலும், கீழே இருந்து பயந்து மேலே இருந்து சிரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“பொம்மைகளின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அவற்றின் வியத்தகு முகபாவனை, இது நாம் அவற்றைப் பார்க்கும் கோணத்தைப் பொறுத்து மாறுபடும்,” என்று போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்தின் ஆய்வின் இணை ஆசிரியரான ஜான் சிமான்ஸ்கி கூறினார்.