சுவிட்சர்லந்தில் ஒரே இரவில் 160 கிலோமீட்டர் பயணம் செய்த நாய் – ஆச்சரியத்தில் மக்கள்
சுவிட்சர்லந்தில் Lucky என அழைக்கப்படும் Border Terrier வகை நாய் ஒரே இரவில் 160 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது.
இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை 14 வயது நாய் சுவிட்சர்லந்தின் பெர்ன் கேன்டன் (Bern canton) நகரிலிருந்து தப்பி சென்றுள்ளது. மறுநாள் காலையில் குறித்த 160 கிலோமீட்டர் தூரத்தில் ஜெனீவா நகரில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
லக்கி இருந்த நாய்ப்பட்டியின் வேலியில் ஓட்டை இருந்ததாக அதன் உரிமையாளர் ஜெனிபர் வேக்னர் கூறினார். அது ஜெனீவா ஆற்றுக்கு அருகே நகரவாசி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
லக்கி மீது நுண்சில்லு பொருத்தப்பட்டிருந்ததால் பொலிஸாரால் இலகுவாக அதன் உரிமையாளர்களை அடையாளம் கண்டனர்.
பயணத்தில் லக்கிக்குக் காயம் ஏதும் ஏற்பட்டதுபோல் தெரியவில்லை. லக்கியை யாராவது வாகனத்தில்தான் அழைத்து வந்திருக்க வேண்டும் என்று வேக்னர் குறிப்பிட்டார்.
இவ்வளவு குறைந்த நேரத்தில் அது ஜெனீவாவரை ஓடிவந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.