நேர்காணல்களில் இனவாத நோக்கத்தோடு பேசுகிறாரா ட்ரம்ப் : எழுந்த சர்ச்சை!
அமெரிக்காவில் குடியேற்றத்தின் தாக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “இரத்தத்தை விஷமாக்குதல்” என்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இந்த வார்த்தைகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்திய உரைகள் மற்றும் நேர்காணல்களில் இந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்திய டிரம்ப், நாஜி தலைவரின் இனவெறி சித்தாந்தத்தை எதிரொலிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
நேர்காணல் ஒன்றின்போது ட்ரம்ப் இந்த சொற்தொடர்களை பயன்படுத்திய நிலையில், அவர் ஹிட்லரைப் பயன்படுத்துகிறாரா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், இல்லை என்றும், ஹிட்லர் இதை பயன்படுத்தி இருப்பது தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
தனது வார்த்தைகளுக்குப் பின்னால் இனவாத நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)