ஸ்கொட்லாந்தில் முதல் முறையாக வேலைநிறுத்தத்தில் இறங்கும் மருத்துவர்கள்!
ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
நாட்டின் தேசிய சுகாதார சேவையில் வேலைநிறுத்தம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை என்று பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக 92% பேர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு மருத்துவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி, ஜனவரி 13, 2026 செவ்வாய்க்கிழமை காலை 07:00 மணி முதல் ஜனவரி 17 சனிக்கிழமை காலை 07:00 மணி வரை பணிபகிஸ்கரிப்பு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




