லண்டனில் கண் பார்வை இழந்த பலருக்கு மீண்டும் கண் பார்வை! வைத்தியர்களின் சாதனை
பிரித்தானியாவின் லண்டனில் கண் பார்வை இல்லாதவர்கள் மேற்கொண்ட சிகிச்சையின் மூலம் மீண்டும் கண் பார்வை கிடைத்துள்ளமை மருத்துவ உலகின் புரட்சியாக கருதப்படுகிறது.
வயதானவர்களுக்கு ஏற்படும் விழித்திரைச் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) நோயால் பார்வையை இழந்தவர்களுக்கு, கண்களின் பின்புறத்தில் நுண்சில்லு (Microchip) பொருத்தப்பட்டு அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.
இந்த புரட்சிகரமான வெற்றியால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த முறையின் கீழ் சிகிச்சை வழங்கி கண்பார்வையை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அவர்களில் 27 பேருக்கு வெற்றிகரமாக கண் பார்வை கிடைத்துள்ளது. அவர்களால் எழுத்துக்களை வாசிக்கக் கூட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் வயதானவர்களுக்கு ஏற்படும் விழித்திரைச் சிதைவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 250,000க்கும் அதிகமாக உள்ளதாக, இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய நிபுணர் மஹி முகிட் (Mahi Muqit) தெரிவித்துள்ளார்.
கண் பார்வையை மங்க ஆரம்பிக்கும் போது எனது வாகன ஓட்டும் உரிமை ரத்துச் செய்யப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்தேன். எனினும் தற்போது மீண்டும் கண் பார்வை கிடைத்துள்ளமையால் மகிழ்ச்சி அடைவதாக, சிகிச்சையின் மூலம் கண்பார்வையை பெற்ற 70 வயதான ஷீலா இர்வைன் என்பவர் தெரிவித்துள்ளார்.
தற்போது எழுத, படிக்க முடிகிறது. சுடோக்கு விளையாட முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





