வைத்தியர்களின் தொடர் பணி பகிஸ்கரிப்பு – அப்பாவி ஏழை மக்களுக்கே பாதிப்பு!
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் முன்னெடுக்கும் தொடர் பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கையால் அப்பாவி ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பிரபல ஊடகவியலாளரொருவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் மக்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளை நம்பி சிகிச்சைகளுக்காக வருகின்றனர். அதேநேரம் வெளி நோயாளர் பிரிவிற்கு வரும் நோயாளர்கள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தங்களுடைய சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் மஹதிவுல்வெவ- கோமரங்கடவல மற்றும் குச்சவெளி, புல்மோட்டை பிரதேசங்களைச் சேர்ந்த அப்பாவி ஏழை மக்கள் தங்களது கிராமங்களில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்திடம் வைத்தியர்கள் விடுக்கும் கோரிக்கை சரியானதாக இருந்தாலும் கூட அப்பாவி ஏழை மக்களே பாதிக்கப்பட்டுகின்றனர்.
ஆகவே கிழக்கு மாகாண வைத்தியர்கள் அப்பாவி ஏழை மக்கள் விடயத்தில் கரிசனை காட்டி தங்களுடைய பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து சிறந்த சேவைகளை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.




