ஆசியா செய்தி

தைவானில் தனக்குத்தானே கருத்தடை செய்து கொண்ட மருத்துவர்

குடும்ப கட்டுப்பாடு என்று வரும் போது பொதுவாக பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சையில் ஆண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்யும் அளவுக்கு வந்து விட்டது.

ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வாசக்டோமி என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் தைவானின் தைபே பகுதியை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான சென் வெய்-நாங் என்பவர் தனக்கு தானே வாசக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

3 குழந்தைகளின் தந்தையான டாக்டர் சென் வெய்-நாங் தனது மனைவி மேலும் குழந்தைகளை பெற விரும்பவில்லை. அதோடு மனைவியை மகிழ்விப்பதற்காகவும், ஆண்களின் கருத்தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தனக்குதானே வாசக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

வழக்கமாக இதுபோன்ற அறுவை சிகிச்சை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் டாக்டர் சென் வெய்-நாங் தனக்குதானே அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் சுமார் 1 மணி நேரம் எடுத்து கொண்டுள்ளார்.

(Visited 55 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி