நீண்ட நேரம் கணினி மற்றும் கையடக்க தொலைபேசி திரைகளை பார்ப்பவரா நீங்கள்? அவதானம்
தற்போதுள்ள சூழலில் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் என வயது வித்யாசம் இன்றி லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை அதிக நேரம் பார்த்து கொண்டிருப்பர்.
இதனால், கண்களில் பாதிப்பு ஏற்படும். அதனால், அவர்கள் கண்களின் நலனை பாதுகாப்பது அவசியமாகிறது.
உங்களிம் அண்றாட உணவில் சில மாற்றங்களை செய்வது மற்றும் கண் பயிற்சிகள் செய்வது போன்றவற்றின் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கலாம்.
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரஞ்ச் பழம் உதவும். இதில், உள்ள வைட்டமின் சி உங்களின் கண்களை பாதுக்காகும்.
வைட்டமின் சி கண்களில் கேபிளரீஸ் நலனை மேம்படுத்துவதோடு, ரெடினல் செல்ஸ் நலனை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
திரிபலா பவுடருடன் நெய் அல்லது தேன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். கண் தசைகளின் பாதிப்பை சரிசெய்ய உலர் திராட்சைகள் உதவுகிறது.
அதிக நேரம் லேப்டாப் ஸ்கீரின் பார்ப்பதால் உங்கள் கண்கள் சூடாகி இருக்கும் அதனால், வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் அவசியமாகிறது.