வாழ்வியல்

உணவை வேகமாக சாப்பிடுவீர்களா? காத்திருக்கும் ஆபத்துகள்

சமைத்து சாப்பிடும் உணவிலும், உணவை சாப்பிடுவதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இருப்பினும் நீங்கள் வேகமாக சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொண்டால் அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா…? ஆம் நீங்கள் வேகமாக சாப்பாட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெடும்.

பல்வேறு காரணங்களால் மக்கள் தங்களின் உணவை வேகமாக சாப்பிடுகின்றனர். பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வேலைக்கோ விரைவாகச் செல்ல வேண்டும் என்பதற்காக கூட சிலர் வேக வேகமாக உணவுகளை சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ நேரம் இருப்பினும், அமைதியாக சூழல் இருந்தாலும் கூட வேகமாக சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

நீண்ட காலமாக இது போன்றவர்கள் அவர்களுக்கே தெரியாமல் வேகமாக சாப்பிடும் பழக்கத்தை தொடர்கிறார். அந்த வகையில் உணவுகளை வேகமாக சாப்பிட்டால், உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

செரிமான பிரச்னைகள் வரும்

முதலில், செரிமான பிரச்சனைகள் அடுத்தடுத்து வரும். உணவுகளை எப்போதும் நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்பது பலரின் அறிவுரையாக இருக்கிறது. அப்படி இருக்க, நீங்கள் உணவுகளை வேகமாக சாப்பிடுவதன் மூலம் அதனை சரியாக மெல்ல மாட்டீர்கள். இதனால், அந்த உணவை செரிக்க இயலாமல் உங்களின் செரிமான அமைப்பில் கோளாறு ஏற்படலாம்.

வேகமாக சாப்பிடுவதால் உப்புசம், அடிவயிற்றில் வலி, குடல் இயக்கத்தில் பிரச்சனை, வாயு தொல்லை போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேகமாக சாப்பிடுவதால் அதிகமாக காற்றையும் நீங்கள் உள்ளிழுப்பீர்கள், இது செரிமான கோளாறு மட்டுமின்றி குடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்.

உடல் எடை ஏறும்

அதிகமாக சாப்பிடுவீர்கள் அதாவது நீங்கள் வேக வேகமாக சாப்பிடும் போது முறையாக உங்களது மூளை அந்த சாப்பாட்டை ஏற்றுக் கொள்ளாது. எனவே உங்கள் வயிறும் வேகமாக நிரம்பாது. இதனால் நீங்கள் தேவைக்கு மிகுந்த உணவுகளை சாப்பிட நேரிடும். அதிகமான உணவுகளை சாப்பிட்டால், அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வீர்கள். இதனால், உங்களின் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இதயம் சார்ந்த நோய்கள் வரலாம்

நீங்கள் வேக வேகமாக சாப்பிடுவதால் செரிமான அமைப்பில் பிரச்சனை உண்டாவது மட்டுமின்றி உடலில் கட்டி, வீக்கம் போன்றவை (Inflammation) உருவாகவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி உங்களின் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் சீராக இல்லாமல் போகும். இதனால் இதயம் சார்ந்த நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் வேகமாக சாப்பிடுவதால் உங்கள் ரத்த அழுத்தமும் அதிகமாகும், இதுவும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்

நீங்கள் வேக வேகமாக சாப்பிட்டால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயரும். ஏனென்றால் நீங்கள் வேகமாக சாப்பிடும் போது உங்களது உடல் அந்த உணவை சரியாக செயல்படுத்தாது, இதனால் ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கும், இன்சுலினும் பெருகும். எனவே இது நீரிழிவுக்கு இட்டுச் செல்லும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பிரச்னையை தரும்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான